நெல்லை மாநகர புதிய துணை போலீஸ் கமிஷனர் பொறுப்பு ஏற்பு

நெல்லை மாநகர புதிய துணை போலீஸ் கமிஷனர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

Update: 2021-06-07 19:55 GMT
நெல்லை, ஜூன்:
நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சீனிவாசன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட துணை போலீஸ் கமிஷனர் ராஜராஜன் நேற்று மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய துணை போலீஸ் கமிஷனர் ராஜராஜன் நெல்லை மாவட்டம் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகவும், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஆகவும் நெல்லை மாவட்டத்திலேயே ஏற்கனவே பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்