மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது
மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கரடிப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்த போது அவர் கரடிபட்டி சாரல் நகரைச் சேர்ந்த ஜெயபால் (வயது 45) என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயபாலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 27 மதுபட்டில்களை பறிமுதல் செய்தனர்.