பணமோசடி செய்த பெண் மீது வழக்கு
பணமோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
தஞ்சாவூர் வில்லூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 55). இவர் நண்பர் மூலம் மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனத்தை அணுகினார். அங்கிருந்த விஷ்ணுபிரியா என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். அதை நம்பி அலாவுதீன் ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 800 கொடுத்து தனது நண்பருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிதரும்படி கேட்டுள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அந்த நிறுவனத்தினர் அவருக்கு வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து அலாவுதீன் அந்த பெண் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.