சித்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
சேரன்மாதேவி சித்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
சேரன்மாதேவி, ஜூன்:
சேரன்மாதேவி மாவடி தெரு கன்னடியன் கால்வாய் கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கடந்த மார்ச் மாதம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜையாக தொடர்ந்து 48 நாட்கள் தினமும் மாலை சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று காலை சிறப்பு ஹோமங்களும், சிறப்பு அபிஷேக அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.