கிளை வாய்க்கால் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு
கிளை வாய்க்கால் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.;
கிருஷ்ணராயபுரம்
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் மாயனூர் காவிரியில் இருந்து பாசன வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டால் தான் தண்ணீர் கடைமடை வரை சென்று பாசன வசதி பெரும். அந்த வகையில் மகாதானபுரம், திருக்காம்புலியூர், கம்மநல்லூர், ஆகிய பகுதியில் செல்லும் கிளை வாய்க்கால்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 11.25 கிலோ மீட்டர் தூரத்தில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது இப்பணியினை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், தவமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.