தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கடனுக்கான தவணை மற்றும் வட்டித்தொகையை கேட்டு மிரட்டும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரித்துள்ளார்.
சிவகங்கை,
மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கடனுக்கான தவணை மற்றும் வட்டித்தொகையை கேட்டு மிரட்டும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரித்துள்ளார்.
புகார்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோய் பெருந்தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கடந்த 10.5.2021 முதல் மாநில அரசால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது 14.6.2021 முடிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், அவசர தேவைக்கென தனியார் நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் மேற்படி கடன் தொகை மற்றும் வட்டித் தொகையினை உடனடியாக செலுத்தக்கோரி, சில தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களை மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கடும் நடவடிக்கை
இதனையும் மீறி மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.