கோவைக்கு 32.38 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது
கோவைக்கு 32.38 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது
கோவை
கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 92 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் பெரும்பாலானோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், அவர்களுக்கு வழங்குவதற்கு அதிகளவு ஆக்சிஜன் தேவைப்பட்டது.
இதையடுத்து ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து கோவைக்கு மருத்துவ ஆக்சிஜன் ரெயில் மூலம் கொண்டு வரப்படுகிறது.
இதன்படி 32.38 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 2 டேங்கர் லாரிகள் ரெயில் மூலம் கோவை மதுக்கரை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ மையத்திற்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவைக்கு இதுவரை 113 மெட்ரிக் டென் ஆக்சிஜன் ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் 3,608 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.