பாறையில் ஓய்வெடுத்த கருஞ்சிறுத்தை

பாறையில் ஓய்வெடுத்த கருஞ்சிறுத்தை.

Update: 2021-06-07 18:21 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்த நேரத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது. 

இந்த நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையோரத்தில் எல்க்ஹில் என்ற இடத்தில் தேயிலை தோட்டத்துக்கு நடுவே உள்ள பாறையில் கருஞ்சிறுத்தை படுத்து ஓய்வெடுத்து கொண்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். 

இது தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த தேயிலை தோட்டத்துக்கு ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. எனினும் அங்கு கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்