கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கொரோனா சிறப்பு மையங்கள் உள்ளன. இதில் 225-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வழக்கமாக கொரோனா வார்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள், முக கவசங்கள், கையுறைகள் உடனுக்குடன் அகற்றப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவுகள் மூட்டைகளாக கட்டப்பட்டு கொரோனா வார்டுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பிற நோயாளிகளும் செல்கிறார்கள். இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.