திருமணமான 4 ஆண்டுகளில் வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 4 ஆண்டுகளில் வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
மேகாலயா மாநிலம் மேற்கு காசில் தாலுகா தங்கர்டால் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன்தாஸ். இவரது மனைவி அஞ்சுதாஸ் (வயது 25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும், ஓசூர் அருகே பாகூரில் தங்கி செங்கல் சூளை ஒன்றில் வேலை செய்து வந்தனர். அர்ஜூன்தாசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அஞ்சுதாஸ், செங்கல் சூளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் வடமாநில பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.