லாலாபேட்டை பகுதியில் விளை நிலங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

லாலாபேட்டை பகுதியில் விளை நிலங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2021-06-07 18:17 GMT
லாலாபேட்டை
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மாயனூரில் இருந்து கட்டளை மேட்டுவாய்க்கால் வழியாக திறந்து விடப்பட்டு, விளை நிலங்களுக்கு பயன்படுத்தப்படும். இதனால் கரூர் மாவட்டம் லாலாபேட்டை சுற்றியுள்ள கள்ளப்பள்ளி, கருப்பத்தூர், பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிபட்டி, மேட்டு மகாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்