கல்பனா சாவ்லா விருது பெற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

வீர தீர செயல் புரிந்த பெண்கள்கல்பனா சாவ்லா விருது பெற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Update: 2021-06-07 18:02 GMT
சிவகங்கை,

இயற்கை இடர்பாடுகள், விபத்துக்களில் சிக்கியவர்கள், தண்ணீரில் மூழ்கியவர்களையும், தீ விபத்து மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களின் போது தைரியத்துடன் செயல்பட்டு பொதுமக்களின் உயிரை காப்பாற்றிய பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சுதந்திர தினவிழாவின் போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த விருது பெற விரும்பும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. எனவே சிவகங்கையை சேர்ந்த வீரதீர செயல் புரிந்த மகளிர்கள் தங்களின் நடவடிக்கை குறித்த ஆவணங்களுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 15.-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்