பக்தர்கள் இன்றி பிரதோஷ விழா

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ விழா நடைபெற்றது

Update: 2021-06-07 17:36 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சிவகாமி சமேத திருத்தளிநாதர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.40 மணி அளவில் திருத்தளிநாதருக்கும், நந்திப்பெருமானுக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதித்து உள்ளது.. இதனால் பக்தர்கள் யாரும் பங்கேற்காமல் சிவாச்சாரியார்கள் மட்டும் பிரதோஷ பூஜையை செய்தனர்.

மேலும் செய்திகள்