சாராயம் விற்ற 5 பேர் கைது
வடபொன்பரப்பி தியாகதுருகம் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது;
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் புதூர், புதுப்பட்டு, தொழுவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தனித்தனியாக சாராயம் விற்ற தொழுவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் குமரேசன்(வயது 28), புதூர் ரேணு மகன் திலீப்குமார்(28), ஜெயராமன் மகன் தனசேகர்(34), புதுப்பட்டு காமராஜ் மகன் ராஜ்குமார்(27) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் தியாகதுருகம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது புது பல்லகச்சேரி கிராமத்தில் வீ்ட்டின் பின்புறம் சாராயம் விற்ற அதேபகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் ராமச்சந்திரன்(31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.