மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

Update: 2021-06-07 16:41 GMT
அணைக்கட்டு

அணைக்கட்டை அடுத்த மலைக் கிராமமான வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 36) என்பவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீ்ட்டில் இருந்து வெளியில் சென்ற இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், கிருஷ்ணமூர்த்தி என்பவர் எனது மகளின் மனதை மாற்றி கடத்தி சென்று எங்கேயோ மறைத்து வைத்துள்ளார். எனது மகளை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வந்தனர்.  
ஆனால் அவரை காணவில்லை.

இந்தநிலையில் நேற்று இளம்பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் என 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது மலைவாழ் மக்கள், காணாமல் போன இளம்பெண்ணை விரைவில் மீட்டுத்தரக் கோரி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்