வேடசந்தூர் அருகே குளத்தில் மண் அள்ளிய 3 டிராக்டர்கள் பறிமுதல்
வேடசந்தூர் அருகே குளத்தில் மண் அள்ளிய 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கரிசல்பட்டி குளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு டிராக்டர்களில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுவதாக எரியோடு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் கரிசல்பட்டி குளத்திற்கு சென்றனர். அப்போது குளத்தில் மண் அள்ளி கொண்டிருந்த நபர்கள், அங்கேயே தங்களது 3 டிராக்டர்களை நிறுத்திவிட்டு நாலாப்புறமாக சிதறி ஓடினர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து மண் அள்ளிய 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மண் அள்ளிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.