தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரணத்துக்காக இதுவரை ரூ.2 கோடி நன்கொடை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரணத்துக்காக இதுவரை ரூ.2 கோடி நன்கொடை பெறப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-06-07 13:51 GMT
தூத்துக்குடி:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரணத்துக்காக இதுவரை ரூ.2 கோடி நன்கொடை பெறப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நன்கொடை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடைகள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரூ.2 கோடி
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர், சுயதொழில் செய்பவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆக மொத்தம் 71 பேர் ரூ.2 கோடியே 6 லட்சத்து 45 ஆயிரத்து 961 நன்கொடை வழங்கி உள்ளனர். இந்த நிவாரணத் தொகையை வங்கி காசோலை, வரைவோலை, பணமாக தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்