ஏலகிரிமலை போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் தர்ணா
ஏலகிரி மலை போலீஸ் நிலையம் முன்பு 30க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை
அடிக்கடி தகராறு
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் உள்ள முத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன், ரெயில்வே ஊழியர். அதேபகுதியில் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தின் உரிய ஆவணங்கள் வேறொரு தனி நபரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த இடத்தை அபகரிக்க மனோகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு நடத்த தேவையான பண செலவுகளுக்கு இங்குள்ள 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் மாதம் மாதம் பணம் வசூலித்து மனோகரன் வழக்கு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அங்குள்ள 4 குடும்பத்தினர் மனோகரனுக்கு ஆதரவு தெரிவிக்காமல் அவருக்கு எதிராக செயல்படுவதாக கூறி மனோகரன் கடந்த 2 ஆண்டுகளாக 4 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வாக்கு வாதம்
ஊரை விட்டு தள்ளி வைத்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மனோகரன் உள்பட 4 பேர் மீது ஏலகிரிமலை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தார்.
பின்னர் இதையறிந்த ரெயில்வே ஊழியர் மனோகரனின் ஆதரவாளர்கள் ஏலகிரி மலை போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து முன்பு அமர்ந்து நேற்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் இதையறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி (பொறுப்பு) தர்ணாவில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரித்தபோது, 4 குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் மனோகரன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். அதேபோல் நாங்கள் கொடுத்த புகாரின் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் போலீஸ் நிலையத்தில் இருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஏலகிரி மலையில் பரபரப்பு ஏற்பட்டது.