பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு
பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்படுத்தப்பட்டது.
மதுரை,
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவையும் மீறி மதுரை நகரில் ஏராளமானோர் வெளியில் வாகனங்களில் சுற்றி திரிகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பணிகளில் உயிரை பணயம் வைத்து போராடும் டாக்டர்கள், நர்சுகள் போலீசார், தூய்மை பணியாளர்கள் போன்று வேடமிட்டு சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி பெரியார் பஸ்நிலையம் சந்திப்பு, கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சமூக ஆர்வலர்கள் வாகனங்களில் சென்றவர்களை நிறுத்தி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது கொரோனா விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை அவர்களுக்கு வழங்கினார்கள். இவர்களின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.