தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
செங்கோட்டை அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
செங்கோட்டை, ஜூன்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான செங்கோட்டை அருகே மோட்டை வனப்பகுதியில் உள்ள வெங்கடேசன் மற்றும் கதிரேசன் ஆகிய இருவருக்கும் சொந்தமான விவசாய தோட்டத்தில் நேற்று காட்டு யானைகள் புகுந்தன. அங்குள்ள 50 தென்னை மரங்களையும், 100-க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களையும் வேரோடு பிடுங்கி சாய்த்தன. இதனைத்தொடர்ந்து தோட்ட காவலாளிகள் பட்டாசு வெடித்தும், தோட்டத்தில் தீ மூட்டியும் யானைகளை விரட்டியுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்துவந்து யானைகளால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.