தென்காசியில் கொரோனாவுக்கு 15 பேர் பலி

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 15 பேர் பலியானார்கள்.

Update: 2021-06-06 20:26 GMT
தென்காசி, ஜூன்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 118 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 20 ஆயிரத்து 419 ேபர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3 ஆயிரத்து 312 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் ஓய்வு பெற்ற ஆசிரியர், 10 முதியவர்கள், 4 பெண்கள் என மொத்தம் 15 பேர் பலியானார்கள். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் தென்காசி மின்மயானத்தில் இறந்தவர்கள் உடல்களை வரிசையாக வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது

மேலும் செய்திகள்