தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண பொருட்கள்
கடையம் அருகே தீவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கடையம், ஜூன்:
கடையம் ஒன்றியம் வீராசமுத்திரத்தை சேர்ந்தவர் முகம்மது ராவுத்தர். இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இதை அறிந்த தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ரூ.15 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.