10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
வாசுதேவநல்லூரில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
வாசுதேவநல்லூர், ஜூன்:
வாசுதேவநல்லூர் பெரியகுளத்தின் கரையில் அய்யர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது. நேற்று அந்த தோட்டத்தில் அறுவடைக்கு தயாரான கரும்புகளை வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.அப்போது தோட்டத்தில் கிடந்த 10 அடி நீள மலைப்பாம்பை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து, வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து சென்றனர்.