சுகாதார துறைக்கு 50 ஆயிரம் முககவசம்
தென்காசியில் சுகாதார துறைக்கு 50 ஆயிரம் முக கவசங்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
தென்காசி, ஜூன்:
தென்காசி-செங்கோட்டை மரம் இறக்குமதியாளர்கள் மற்றும் சா மில் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட சுகாதார துறைக்கு முதற்கட்டமாக தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சமீரனிடம் 50 ஆயிரம் முக கவசங்களை சங்க நிர்வாகிகள் அழகராஜா, வெங்கடேஷ் ராஜா, சிவ்கன் கே.படேல், வல்ஜி என்.படேல் உள்ளிட்டோர் வழங்கினர். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யோகானந்த், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.