புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலியாகினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தொற்று அதிகமாக இருந்தது. முழு ஊரடங்கு மற்றும் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக மாவட்டத்தில் தற்போது தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கொரோனா பாதித்தவர்களில் 277 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது மாவட்டத்தில் 2 ஆயிரத்து 393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் 9 பேர் பலியாகினர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 239 ஆக அதிகரித்துள்ளது.