திசையன்விளையில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

திசையன்விளையில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-06-06 19:18 GMT
திசையன்விளை, ஜூன்:
திசையன்விளையில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரிசோதனை

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று அரிசி, சீனி மற்றும் அத்யாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த திசையன்விளை போலீசார், பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். பின்னர் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் விக்டோரியா கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனைக்கு பின்னர் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஓட்டம் பிடித்தனர்

கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்கள் வாங்கப்பட்டு, முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த சிலர் கொரோனா பரிசோதனைக்கு பயந்து பொருட்களை வாங்காமல் ஓட்டம் பிடித்தனர். 
இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்