காட்டுப்பன்றி கடித்து விவசாயி படுகாயம்

காரியாபட்டி அருகே காட்டுப்பன்றி கடித்து விவசாயி படுகாயம் அடைந்தார்.;

Update: 2021-06-06 18:50 GMT
காரியாபட்டி, 
 காரியாபட்டியை அடுத்த எஸ்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி. இவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் நாய் ஒன்று சத்தம் போட்டு கொண்டு இருந்தது. இதையடுத்து சரவணன் அங்கு சென்றார். அப்போது தோட்டத்திற்குள் காட்டு பன்றி ஒன்று நுழைந்தது. உடனே அவர் அந்த பன்றியை விரட்ட முயற்சித்தார். அப்போது காட்டுப்பன்றி சரவணனை கடித்து குதறியது.  இதில் படுகாயம் அடைந்த சரவணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்