வேனில் கடத்திய 54 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்-2 பேர் கைது

மானாமதுரை அருகே வேனில் கடத்திய 54 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-06-06 18:23 GMT
மானாமதுரை,

மானாமதுரை அருகே வேனில் கடத்திய 54 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

54 மூடை ரேஷன் அரிசி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரைக்கு ஒரு சரக்கு வேன் சென்றது. மானாமதுரை அருகே எம்.கரிசல்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் அந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வேனில் 54 மூடை ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. வேனில் இருந்த மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த தங்கம் மகன் மணி (வயது 22), அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கதிர்வேல்(32) ஆகிய 2 பேரிடமும்  போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் இவர்கள் பரமக்குடி பகுதியில் இருந்து மதுரைக்கு கள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசி மூடைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிசி மூடைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மானாமதுரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்