மேலும் 420 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-06-06 18:18 GMT
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது. 
உயர்வு 
மாவட்டத்தில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40,488 ஆக உயர்ந்துள்ளது.
 இதுவரை 37,128 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,070 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,902 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
4 பேர் பலி 
மேலும் நோய் பாதிப்புக்கு 4 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது.  மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,198 படுக்கைகள் உள்ள நிலையில் 705 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 403 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,323 படுக்கைகள் உள்ள நிலையில் 548 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 775 படுக்கைகள் காலியாக உள்ளன.
மாநில பட்டியல் 
விருதுநகர் சூலக்கரை, கொல்லர்தெரு, சிவன் கோவில் தெரு, புதுத்தெரு, கே.எஸ்.எஸ்.என்.நகர், பாண்டியன் நகர், சத்திரரெட்டியபட்டி, அல்லம்பட்டி, ஆர்.ஆர்.நகர், துலுக்கப்பட்டி, ஆமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
 மேலும் திருச்சுழி, கல்லுமடம், உலக்குடி, உளுத்தி மடை, பனைக்குடி, வீரசோழன், பாலையம்பட்டி, பந்தல்குடி, வேப்பங்குளம், அருப்புக்கோட்டை, ராமசாமிபட்டி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 மாவட்ட பட்டியலில் நேற்று 118 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 420 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்