நாமக்கல்லில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்தவர் கைது

நாமக்கல்லில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்தவர் கைது

Update: 2021-06-06 18:14 GMT
நாமக்கல், ஜூன்.7-
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 41). சமூக ஆர்வலர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள சுந்தரலிங்கனார் சிலைக்கு அருகே 2 பட்டா கத்தியுடன் வந்தார். அங்கு நின்று கொண்டு பாளையங்கோட்டை சிறையில் மர்மமான முறையில் இறந்த சட்டக்கல்லூரி மாணவர் முத்துமனோ சாவுக்கு நீதி வேண்டும் என சத்தம் போட்டார். இதையே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டு உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நாமக்கல் போலீசார் திருமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======

மேலும் செய்திகள்