ரூ.10 லட்சம் கொள்ளை வழக்கு: மேலும் ஒரு வாலிபர் கைது

ரூ.10 லட்சம் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக மேலும் ஒரு வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-06 18:02 GMT
ரூ.10 லட்சம் கொள்ளை வழக்கு:
மேலும் ஒரு வாலிபர் கைது
திருச்சி, 
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நஜிமா (வயது 72). இவர் கடந்த 25-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறையூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது இவரது வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சையது என்ற வாலிபரை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்