மணல் திருடிய 8 பேர் கைது

மணல் திருடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-06 18:01 GMT
கரூர்
கரூர் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருப்பம்பாளையம் அருகே உள்ள அமராவதி ஆற்றுப் பகுதியில் மணல் திருடிய சிவகுமார் (வயது 37), பொன்னுசாமி (50), செல்வராஜ் (55), மாயவன் (37), கவுசிக் (19), சந்தோஷ் (22) மற்றும் 2 சிறுவர்கள் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்