விபத்தை தவிர்க்க மண் மூட்டைகள்

விபத்தை தவிர்க்க மண் மூட்டைகள்.

Update: 2021-06-06 17:55 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் குந்தலாடியில் இருந்து ஓர்கடவு செல்லும் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. 

இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபயாம் நிலவியது. இதையொட்டி அங்கு மேலும் மண் சரிவு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் சாலையோரத்தில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் விபத்து அபாயத்தை குறிக்கும் வகையில் சிவப்பு நிற துணி பறக்கவிடப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்