கொரோனா தடுப்பூசி முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-06-06 17:33 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம்  ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிட நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில், கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. 

முகாமை பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிரிஸ் ஆலன் தொடங்கி வைத்தார். 

முகாமில் பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர்.நகர், கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, மூலக்கடை, கட்டக்காடு, புல்லாவெளி, வெள்ளரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களை சேர்ந்த 18 வயது முதல் 44 வயது வரை உடைய பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

இவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

 முகாம் தொடக்க நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார், துணைத்தலைவர் சுருளிராஜன், ஊராட்சி செயலர் திருப்பதி, வார்டு உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வி, ஜெயமணி, ஆண்டியம்மாள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்