4 பேர் மீது குண்டர் சட்டம்

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-06-06 17:26 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலக்கடலாடி பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 28). இவரை முருகலிங்கம்(40), சகோதரர்கள் வில்வத்துரை, காளிமுத்து ஆகியோர் சேர்ந்து இடத்தகராறு காரணமாக கடந்த மார்ச் மாதம் அரிவாளால் வெட்டினர். இதுதொடர்பாக கடலாடி போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
இந்தநிலையில் இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அதற்கான உத்தரவிட்டுள்ளார். இதன்படி கடலாடி போலீசார் இந்த 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியை சேர்ந்தவர் வீரசோழன் லட்சுமணன் என்ற யோலட்சுமணன் (31) என்பவரை முதுகுளத்தூர் அருகே சிவஞானபுரம் விலக்கு பகுதியில் வைத்து கத்தி அரிவாள் மற்றும் 23 கிலோ கஞ்சாவுடன் முதுகுளத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர் தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததை தொடர்ந்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அதற்கான உத்தரவிட்டுள்ளார். 
இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் போலீசார் யோக லட்சுமணனை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 7 பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்