118 பேருக்கு கொரோனா; 6 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 118 பேருக்கு கொரோனா; 6 பேர் பலி

Update: 2021-06-06 17:25 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 118 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 17 ஆயிரத்து 957 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 211 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 14 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2 ஆயிரத்து 840 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 277 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மேலும் செய்திகள்