பொள்ளாச்சி அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

பொள்ளாச்சி அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-06 17:05 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டர்கள், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டன.

மண் திருட்டு

ஊரடங்கையொட்டி பொள்ளாச்சி மண்டல துணை தாசில்தார் சரவணன் தலைமையில், நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

இவர்கள் கொரோனா விதிகளை மீறி வெளியே வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் அதிகாரிகள் கோ மங்கலத்தில் இருந்து சங்கம்பாளையம் செல்லும் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, முள்ளிமடை குட்டை என்ற இடத்தில் சட்டவிரோதமாக சிலர் கிராவல்மண் திருடி கொண்டு இருந்தனர். இதனைகண்ட அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

இதில், அவர்கள் சீலக்காம்பட்டியை சேர்ந்த அருண்குமார், கனகராஜ், பாஸ்கர், எஸ்.மலையாண்டிபட்டணத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பதும், மண் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் பிடித்து அதிகாரிகள் கோமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் போலீசார் கைது செய்தனர். மேலும் மண் திருட்டுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்