பழங்குடியின கிராமத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்
பழங்குடியின கிராமத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறை வில்லோணி எஸ்டேட் பகுதியையொட்டி வனப்பகுதியில் ஆதிவாசி, பழங்குடியின மக்கள் வசிக்கும் நெடுங்குன்றம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றன.
இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் பாபுலட்சுமண் தலைமையில் சோலையார் நகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மேலும் அந்த கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து மருத்துவ குழுவினர் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, யாருக்காவது தொடர்ச்சியாக இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பின்னர் ஏற்கனவே தொடர்ந்து இருமல், சளி இருப்பதாக தெரிவித்தவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.