போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது

அவினாசி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-06 16:37 GMT
அவினாசி
அவினாசி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
அவினாசி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன் மற்றும் போலீஸ்காரர் திருவேங்கடம் (வயது 35) ஆகியோர் நேற்று அவினாசியை அடுத்து தெக்கலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது தெக்கலூர் செங்காலிபாளையம் மூலக்காட்டு தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே போலீசார் அங்கு சென்று அங்கிருந்த நடராஜ்(53),நடராஜ் மகன் சுதன் (20), சட்டாம்பிள்ளை (32), லோகேஸ்வரன் (20), முத்துசாமி (34) ஆகியோரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
அப்போது திடீரென நடராஜ் உள்ளிட்ட 5 பேர் தகாத வார்த்தைகளால் திட்டிகொண்டே அங்கு கிடந்த மரக்கட்டையால் போலீஸ்காரர் திருவேங்கடத்தை பயங்கரமாக தாக்கியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜ், சுதன், சட்டாம்பிள்ளை, முத்துசாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 66 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடி தலைமறைவான லோகேஸ்வரனை போலீசார் தீவிர தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்