கோவில்பட்டியில் ஏழைகளுக்கு கொரோனா நிவாரண உதவி
கோவில்பட்டியில் ஏழைகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக காயிதே மில்லத் 126வது பிறந்த நாளை முன்னிட்டு கொரானா நிவாரண நலத்திட்ட உதவிகள் ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கிராமம் முகமது சாலிஹா புரம் உமறுபுலவர் மண்டபத்தில் வைத்து நடந்தது, நகர தலைவர் காஜா மீரான் தலைமையில், துணை தலைவர் புகாரி சரிபுது, இளைஞர் அணி தலைவர்ஷேக் மைதின் நிவாரண உதவி களை வழங்கி னார்கள், நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் ரியாஸ், மகளிரணி தலைவி ஜன்னத், ஜமாத் தலைவர் செய்யது மகபூப் பாட்ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.