தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது

தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் 3பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-06-06 16:29 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் 3பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரோந்து
தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எட்டயபுரம் ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 
3 பேர் கைது
விசாரணையில், அவர்கள், தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த காளியப்பன் (வயது 25), ராஜகோபால்நகரை சேர்ந்த மாரித்தங்கம் (20), அண்ணாநகரை சேர்ந்த நாராயணன் என்ற லட்சுமி நாராயணன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் மோடடார் சைக்கிளில் 4 அரிவாள்களும் வைத்து இருந்தனர். இவர்கள் எட்டயபுரம் ரோட்டில் சென்ற ஒருவரை வழிமறித்து செல்போனை வழிப்பறி செய்து இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
ஆயுதங்கள் பறிமுதல் 
அவர்களிடம் இருந்த 4 அரிவாள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட காளியப்பன் மீது 19 வழக்குகளும், மாரித்தங்கம் மீது 3 வழக்குகளும், நாராயணன் என்ற லட்சுமி நாராயணன் மீது 2 வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்