தூத்துக்குடியில் பள்ளி மாணவி கடத்தல்
தூத்துக்குடியில் பள்ளி மாணவி கடத்தி செல்லப்பட்டாள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுவிட்டாராம்.
இதைத் தொடர்ந்து, சிறுமியிடம் இருந்த செல்போனை, அவரது தந்தை தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது சிறுமியை யாரோ கடத்தி சென்று குடோனில் அடைத்து வைத்து இருப்பதாக கூறினாராம்.
இதுகுறித்து மாணவியின் தந்தை தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்தார். முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.