சங்கராபரணி பாலத்தில் மின்விளக்குகள் சீரமைப்பு

மங்கலம் தொகுதியை சேர்ந்த ஆச்சாள்புரம் சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

Update: 2021-06-06 13:14 GMT
வில்லியனூர், 

கடந்த சில மாதங் களுக்கு முன்பு அந்த மின்விளக்குகள் பழுதானது. இதை மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்காததால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இரவு நேரத்தில் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் தேனீ.ஜெயகுமார் எம்.எல். ஏ.விடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மின்வாரிய ஊழியர்கள் மின்விளக்குகளை சீரமைத்தனர்.

மேலும் செய்திகள்