இரும்பிலி கிராமத்தில் மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி
இரும்பிலி கிராமத்தில் மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள இரும்பிலி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது இரும்பிலி கிராமத்தைச் சேர்ந்த செல்வி (வயது 50) என்பவரின் 2 சினை மாடுகள், செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொன்மொழி (30) என்பவரின் பசு மாடு என 3 பசுமாடுகள் மின்னல் தாக்கி பலியாகின.
மின்னல் மற்றும் இடி தாக்கியபோது அங்கிருந்த பொன்மொழியின் கைகால்கள் அதிர்ச்சியில் செயலற்றுப் போனது. அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டுக்குக் கொண்டு வந்தனர்.
மேலும் மின்னல் தாக்கியபோது கிராமத்தில் 50 வீடுகளில் இருந்த டி.வி. உள்பட மின் சாதனப் பொருட்கள் சேதம் அடைந்தன. அப்பகுதியில் மின் தடை செய்யப்பட்டதால் இரவு முழுவதும் மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டனர்.
மின்னல் தாக்கி பலியான பசு மாடுகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். பலியான பசுமாடுகளை கால்நடை மருத்துவர் கருணாநிதி, கால்நடை ஆய்வாளர் வேலு ஆகியோர் பிரேதப் பரிசோதனை செய்தனர்.