வாணியம்பாடி அருகே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திய உடை சாலையில் வீச்சு

வாணியம்பாடி அருகே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திய உடை சாலையில் வீச்சு

Update: 2021-06-06 11:43 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளை சந்திக்கச் செல்லும்போது டாக்டர்கள், நர்சுகள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், கொரோனா பரிசோதனை செய்யும் பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிகிறார்கள். அஅவர்கள் பயன்படுத்தும் ஆடைகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் சமீபகாலமாக சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர், நெக்குந்தி பகுதியிலும், சுங்கச்சாவடி பகுதியிலும் சில நாட்களாக இந்த உடைகள் ஆங்காங்கே வீசிச்செல்லப்படுகிறது. இதனால் கொரோனா பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்று சாலையில் வீசப்படுவதை தடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்