தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே சுற்றிய 100 பேர் மீது வழக்கு
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே சுற்றிய 100 பேர் மீது வழக்கு
குன்னூர்
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஆர். நகர், சித்தி விநாயகர் கோவில் தெரு, கன்னிமாரியம்மன் கோவில் தெரு, காந்திபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. இதையொட்டி அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அந்த பகுதிகளில் உள்ளே இருந்து வெளியே செல்லவும், வெளியே இருந்து உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து சிலர் தடையை மீறி வெளியே வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். இதனால் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து குன்னூர் நகர போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே வந்ததாக 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 59 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இனிமேலும் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.