ஆம்புலன்சை வழிமறித்த காட்டுயானைகள்

ஆம்புலன்சை வழிமறித்த காட்டுயானைகள்

Update: 2021-06-05 23:37 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே சாமியார் மலைப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. அவை இரவில் அருகில் உள்ள மூலக்கடை, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, குழிக்கடவு, சன்னக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மூலக்கடை பகுதிகளில் அந்த காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து மேத்யூ, பேபி, ஜார்ஜ், ஜேக்கப் உள்ளிட்ட விவசாயிகளின் தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. 

பின்னர் தட்டாம்பாறை-சுல்தான்பத்தேரி சாலையில் உலா வந்தன. அப்போது அந்த வழியாக தட்டாம்பாறையில் இருந்து சுல்தான்பத்தேரிக்கு 3 கொரோனா நோயாளிகளை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சை காட்டுயானைகள் வழிமறித்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற வன காவலர் சுப்பிரமணியம் தலைமையிலான வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டியடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் பாதுகாப்புடன் அங்கிருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்