பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.20 விலை நிர்ணயம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.20 விலை நிர்ணயம்
மஞ்சூர்
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர்.
இதற்காக நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. அதில் விவசாயிகள் வழங்கும் பச்சை தேயிலைக்கு கட்டபெட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் மட்டும் வாராந்திர விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
மற்ற 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளிலும் மாதாந்திர விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நடப்பு ஜூன் மாத குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.