சேலம் மாநகர போலீஸ் புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

சேலம் மாநகர போலீஸ் புதிய கமிஷனர் பொறுப்பேற்றார்.

Update: 2021-06-05 23:25 GMT
சேலம்:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் சந்தோஷ்குமார். இவர் சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக தமிழ்நாடு காகித ஆலை தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பணியில் இருந்த நஜ்மல் ஹோடா சேலம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். இவர் சேலம் மாநகர 20-வது போலீஸ் கமிஷனர் ஆவார். அவரை போலீஸ் துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்