சசிகலாவை நோக்கிதான் இனி அ.தி.மு.க. செல்லும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
சசிகலாவை நோக்கி தான் இனி அ.தி.மு.க. செல்லும்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
திருப்பத்தூர்
சசிகலாவை நோக்கிதான் இனி அ.தி.மு.க. செல்லும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
பேட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆய்வு செய்தார். அவர் கீழச்சிவல்பட்டி, சேவிணிப்பட்டி, பூலாங்குறிச்சி, நெற்குப்பை, திருக்கோஷ்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மருத்துவர்களிடம் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு குறித்தும், தடுப்பூசிகள் இருப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் ே்பட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தடுப்பூசி பற்றாக்குறை
தடுப்பூசி பற்றாக்குறைக்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணம். ஏனெனில் தடுப்பூசியை கொள்முதல் செய்வது மத்திய அரசுதான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 12-ம் வகுப்புத் தேர்வை மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு நடத்துவதுதான் சாதுர்யம். கொரோனா காலத்தில் தேர்தலையே நடத்தி விட்டோம்.
கல்லூரிகளில் மாணவர்களுக்கு மதிப்பீடுகளை வைத்தே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அனைவரும் தேர்ச்சி என்ற முறை மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி நீதிமன்றம் வரை செல்லக்கூடும்.
சசிகலா
இனி சசிகலாவை நோக்கி தான் அ.தி.மு.க. செல்லும். இது எனது ஆரூடம். சரித்திர விபத்தால் முதல்-அமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆட்சி காலகட்டம் முடிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.